உன் இதய கூட்டுக்குள் ஓரிடம் வேண்டும் - அகில் வேந்தன்

என் தூரத்து தொடுவானமே..! தொடு திரையில் தோன்றிய டிஜிட்டல் தூரிகையே..! உன் எண்ணமிலா, இந்த கற்பனை வானில் கொஞ்ச நேரம் அனுமதி கொடு. என் நினைவுகளின் நிறமிகளால் வண்ணம் தூவி வானவில்லாக்கிக்கொள்கிறேன். நான் சொன்ன தொடுவானம் எங்கும் தொட்டதில்லை, எழுநிறம் கொண்டாலும் வானவில்லின் வண்ணங்கள் ஒன்றுக்கொன்று குழைந்ததில்லை. கண்ணியமான தூரத்தில் நின்று, தொடர்பில்லா உன்னை, யாரோ ஒருவனாய் கவித்து கொள்கிறேன். என்விழிகளுக்கு புலனத்தில் புலபட்டவளே..! பிறந்தநாள் வாழ்த்தில் புதிதாய் பிறந்தவளே..! பேரும் ஊரும் ஏதுமில்லை, முகமுண்டு முகவரியில்லை, உனை பார்த்த சில நிமிட தாக்கம், தாயை பிரியும் சேயின் ஏக்கம், களவு போனது என் இரவின் தூக்கம் , ஒரு செயலியால் ஒரு நாளும், நான் செயலிழந்ததில்லை. மொத்தமாக என்னை முடக்கி போட்ட இறக்கமற்றவள் நீ..! அகண்ட பாரதம் கேட்க்கும் நாட்டில் குரலை கூட என் செவிகளுக்கு தராத, குறுகிய இதயமற்றவள் நீ..! அடையாளம் ஏதும் தெரியாமல் ...